திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 281

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்தமுன்புஇப் பிறவி முடிவது தானே.

உரை

உயிர்கள் பிறந்த பிறவியிலேயே பேரின்பம் அடைவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் இறைவன் செய்து வைத்திருந்தாலும், உயிர்கள் தாம் எடுத்த பிறவியில் துன்பத்தைத் தரக்கூடிய உலக ஆசைகளின் வழியே பலவித செயல்களைச் செய்கின்றன. உயிர்கள் ஆசை வழியே சென்றாலும், அவற்றின் மேல் கொண்ட பேரன்பினால், அவற்றின் பிறவியை அறுக்கும் ஒரு வழியாகத் தூய்மையான அன்பை இறைவன் வைத்திருக்கின்றான். ஆசை வழியே சென்று துன்பத்திற்குரிய காரியங்களைச் செய்யும் உயிர்களானாலும், தூய்மையான அன்புடன் இருந்தால், அவற்றுக்கு வேறு பிறவியில்லாத முக்தியை இறைவன் வழங்கி அருளுவான்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் பிறந்த பிறவியிலேயே பேரின்பம் அடைவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் இறைவன் செய்து வைத்திருந்தாலும், உயிர்கள் தாம் எடுத்த பிறவியில் துன்பத்தைத் தரக்கூடிய உலக ஆசைகளின் வழியே பலவித செயல்களைச் செய்கின்றன.

  • வரி 2

    உயிர்கள் ஆசை வழியே சென்றாலும், அவற்றின் மேல் கொண்ட பேரன்பினால், அவற்றின் பிறவியை அறுக்கும் ஒரு வழியாகத் தூய்மையான அன்பை இறைவன் வைத்திருக்கின்றான்.

  • வரி 3

    ஆசை வழியே சென்று துன்பத்திற்குரிய காரியங்களைச் செய்யும் உயிர்களானாலும், தூய்மையான அன்புடன் இருந்தால்,

  • வரி 4

    அவற்றுக்கு வேறு பிறவியில்லாத முக்தியை இறைவன் வழங்கி அருளுவான்.

திருமந்திரம் பாடல் #281

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout