திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 282

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளிஇன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனதுன்புறு கண்ணியைந் தொடும் துடக்கற்றுநண்புறு சிந்தையொடு நாடுமின் நீரே.

உரை

அனைத்து உயிர்களிடமும் தூய்மையான அன்புடன் இருப்பவர்களின் எண்ணத்தில் பேரொளியாக எழும் இறைவன், உயிர்களின் பிறவியை அறுத்து பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தமாக, இரண்டு கண்களுக்கு நடுவே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் இணைந்து எழுகின்றான். உயிர்களின் உள்ளத்தில் பேரொளியாக இறைவன் எழுந்தபின், ஆன்மாக்களுக்குத் துன்பத்தைத் தரும் ஐம்புலன்களின் தொடர்பு அறுபட்டு நீங்கும். அனைத்து உயிர்களிடமும் அன்பையே சிந்தனை செய்யும் எண்ணத்தோடு அவனைச் சென்று அடையுங்கள் நீங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களிடமும் தூய்மையான அன்புடன் இருப்பவர்களின் எண்ணத்தில் பேரொளியாக எழும் இறைவன்,

  • வரி 2

    உயிர்களின் பிறவியை அறுத்து பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தமாக, இரண்டு கண்களுக்கு நடுவே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் இணைந்து எழுகின்றான்.

  • வரி 3

    உயிர்களின் உள்ளத்தில் பேரொளியாக இறைவன் எழுந்தபின், ஆன்மாக்களுக்குத் துன்பத்தைத் தரும் ஐம்புலன்களின் தொடர்பு அறுபட்டு நீங்கும்.

  • வரி 4

    அனைத்து உயிர்களிடமும் அன்பையே சிந்தனை செய்யும் எண்ணத்தோடு அவனைச் சென்று அடையுங்கள் நீங்கள்.

திருமந்திரம் பாடல் #282

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout