திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 317

தொடர்ந்து படிக்கread this section continuously

கல்லாத மூடரைக் காணவும் ஆகாதுகல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்றுகல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்கல்லாத மூடர் கருத்துஅறி யாரே.

உரை

உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்களைச் சென்று பார்ப்பது நமக்கு நல்லது இல்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்டே ஆக வேண்டும் என்கிற கடமையும் நமக்கு இல்லை. உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்கள், தம்மைப் போலவே கற்று அறியாத மற்ற மூடர்களையே நல்லவர்கள் என்று சொல்வார்கள். கல்லாத மூடர்க்கு எந்தக் கருத்தையும் அறிந்துகொள்ளும் திறன் கிடையாது.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்களைச் சென்று பார்ப்பது நமக்கு நல்லது இல்லை.

  • வரி 2

    அவர்கள் சொல்லுவதைக் கேட்டே ஆக வேண்டும் என்கிற கடமையும் நமக்கு இல்லை.

  • வரி 3

    உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்கள், தம்மைப் போலவே கற்று அறியாத மற்ற மூடர்களையே நல்லவர்கள் என்று சொல்வார்கள்.

  • வரி 4

    கல்லாத மூடர்க்கு எந்தக் கருத்தையும் அறிந்துகொள்ளும் திறன் கிடையாது.

திருமந்திரம் பாடல் #317

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout