திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 321

முதல் தந்திரம்23. நடுவு நிலைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதிநடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.

உரை

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே, பின்பு உலகத்தைக் காக்கும் திருமாலாகவும், உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள். அவர்களுள் சிலர் சிறந்த ஞானியாகிச் சிவமாகவே மாறிவிடுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே, பின்பு உலகத்தைக் காக்கும் திருமாலாக மாறுவார்கள்.

  • வரி 2

    அவர்களே உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள்.

  • வரி 3

    நடுநிலையுடன் நின்றவர்களுள் சிலர் சிறந்த ஞானியாக ஆவார்கள்.

  • வரி 4

    அவ்வாறு ஆனவர்கள் சிவமாகவே மாறிவிடுவார்கள்.

திருமந்திரம் பாடல் #321

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout