தொடர்ந்து படிக்கread this section continuously
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.
உரைmeaning
பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி, தேவர்களாகி, சிவமாகவே ஆகின்றார்கள். யாமும் நடுநிலையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.
Some among those who stand in the even state described in verse 320 become excellent gnanis, become devas, and become Sivam itself. I too remain mingled with those who stand in that even state.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகின்றார்கள்.
Some among those who stand in the even state described in verse 320 become excellent gnanis.
- வரி 2Line 2
அவர்களுள் சிலர் தேவர்களாகின்றார்கள்.
Some among them become devas.
- வரி 3Line 3
அவர்களுள் சிலர் சிவமாகவே ஆகின்றார்கள்.
Some among them become Sivam itself.
- வரி 4Line 4
யாமும் நடுநிலையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.
I too remain mingled with those who stand in that even state.
திருமந்திரம் பாடல் #322





