திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 323

முதல் தந்திரம்23. நடுவு நிலைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றிஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடிமூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தைநான்றுநின் றார்நடுவு ஆகிநின் றாரே.

உரை

அண்டசராசரங்கள் அனைத்திலும் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவமூர்த்தி ஒருவனே, அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, ஈசன் திருவடிகளைப் பற்றி, மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவனாகிய சதாசிவமூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள், நடுநிலையுடன் இருக்கும் ஞானியாகி விடுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அண்டசராசரங்கள் அனைத்திலும் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவமூர்த்தி ஒருவனே; அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை.

  • வரி 2

    இதை உணர்ந்து ஈசன் திருவடிகளைப் பற்றி நிற்பவர்கள்,

  • வரி 3

    மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவனாகிய சதாசிவமூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரத்தை

  • வரி 4

    சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள், நடுநிலையுடன் இருக்கும் ஞானியாகி விடுவார்கள்.

திருமந்திரம் பாடல் #323

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout