திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 330

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மயக்கும் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்இயங்கும் மடவார்தம் இன்பமே எய்திமுயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்திஇயங்கும் இடையறா ஆனந்தம் எய்தே.

உரை

மதுவானது குடிப்பவரின் புத்தியில் தடுமாற்றத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். உண்மை பேசுவதைத் தடுத்துப் பொய் பேச வைக்கும். மது அருந்துபவர்கள் இன்பத்துக்காகப் பொதுமகளிரை நாடி அவர்களிடம் மயங்கி இருப்பார்கள். இவர்களுக்கு, நல்லறிவைக் கொடுக்கும் உண்மை ஞானத்தினால் கிடைக்கும் பேரானந்தம் ஒரு போதும் கிடைக்காது.

வரி வாரியாக

  • வரி 1

    மதுவானது குடிப்பவரின் புத்தியில் தடுமாற்றத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்தும்.

  • வரி 2

    உண்மை பேசுவதைத் தடுத்துப் பொய் பேச வைக்கும்.

  • வரி 3

    மது அருந்துபவர்கள் இன்பத்துக்காகப் பொதுமகளிரை நாடி அவர்களிடம் மயங்கி இருப்பார்கள்.

  • வரி 4

    இவர்களுக்கு, நல்லறிவைக் கொடுக்கும் உண்மை ஞானத்தினால் கிடைக்கும் பேரானந்தம் ஒரு போதும் கிடைக்காது.

திருமந்திரம் பாடல் #330

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout