திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 325

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டுநித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.

உரை

உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு, இறைவனின் மேல் சிந்தனையை வைத்து, யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில், குண்டலினி சக்தியைச் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சகஸ்ரதளத்தில் சேர்த்தால், அங்கே ஊறும் மிகவும் தூய்மையான அமிர்தத்தைப் பருகிப் பேரானந்தத்திலேயே இருக்கலாம். அதை விட்டுவிட்டு, புத்தியை மயக்கும் உலக மதுவைப் பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும், சுய நினைவின்றி மயங்கிக் கிடப்பதும், உயிர்களை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு, இறைவனின் மேல் சிந்தனையை வைத்து, யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில்,

  • வரி 2

    குண்டலினி சக்தியைச் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சகஸ்ரதளத்தில் சேர்த்தால், அங்கே ஊறும் ஓயாத அமிர்தத்தைப் பெறலாம்.

  • வரி 3

    அந்த மிகவும் தூய்மையான அமிர்தத்தைப் பருகிப் பேரானந்தத்திலேயே இருப்பதை விட்டுவிட்டு,

  • வரி 4

    புத்தியை மயக்கும் உலக மதுவைப் பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும், சுய நினைவின்றி மயங்கிக் கிடப்பதும், உயிர்களை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.

திருமந்திரம் பாடல் #325

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout