பலியும் அவியும் பரந்து புகையும்ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லைஅவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடிதேட அரியன் சிறப்பிலி எம்இறைஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.
இயம்புவன் ஆசனத் தோடு மலையும்இயம்புவன் சித்தக் குகையும் இடமும்இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சிஅகம்பர மாதனம் எண்எண் கிரியைசிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.
அகமுக மாம்பீடம் ஆதார மாகும்சகமுக மாம்சத்தி யாதன மாகும்செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியேதூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதிஅரிய பரசிவம் யாவையும் ஆகிவிரிவு குவிவுஅற விட்ட நிலத்தேபெரிய குருபதம் பேசஒண் ணாதே.
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.
கருடன் உருவம் கருதும் அளவில்பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்குருவின் உருவம் குறித்த அப் போதேதிரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்குஅண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்மான்ற அறிவு மறிநன வாதிகள்மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றறஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்பந்தம் இலாத பளிங்கின் உருவினள்பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழநிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்கவனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்தானாம் பறவை வனமெனத் தக்கனதானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே.
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்திஉருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்குஅருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டுநிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்தலைப்பட லாகும் தருமமும் தானே.
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்துதுளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்றவளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னைவிலக்குறின் மேவை விதியென்றும் கொள்கஅனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானைநினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே.
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கிநிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளேபுகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்இந்த இரேகை இலாடத்தின் மூலத்தேசுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்கண்ணுமா யோகக் கடவுள் இருப்பதுமண்ணு நீரனல் காலொடு வானுமாய்விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்குஉரிய பதியும்பா ராக்கி நின்றானே.
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்தம்பர மல்லது தாமறியோம் என்பர்உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரைபாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழிஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅருஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றனஓங்கார சீவ பரசிவ ரூபமே.
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்அருக்கம் சராசரம் ஆகும் உலகில்தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனிசுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.
மலையும் மனோபவம் மருள்வன ஆவனநிலையில் தரிசனம் தீப நெறியாம்தலமும் குலமும் தவம்சித்த மாகும்நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்குஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்துஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.
ஒளியை அறியில் உருவும் ஒளியும்ஒளியும் உருவம் அறியில் உருவாம்ஒளியின் உருவம் அறியில் ஒளியேஒளியும் உருக உடனிருந் தானே.
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலேஇகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே.
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்துளங்கொளி பெற்றன சோதி யருளவளங்கொளி பெற்றதே பேரொளி வேறுகளங்கொளி செய்து கலந்து நின்றானே.
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லிதுளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றிவிளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே.
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளிபன்னிய ஞானம் பரந்து பரத்தொளிதுன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்உன்னிய வாறுஒளி ஒத்தது தானே.
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்களங்கொளி ஈசன் கருத்தது தானே.
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்துலங்கொளி போல்வது தூங்கருட் சத்திவிளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றிஉளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே.
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதிவிளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கிவளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்ததுளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆடவிளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே.
போது கருங்குழற் போனவர் தூதிடைஆதி பரத்தை அமரர் பிரானொடும்சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளிநீதியின் நல்லிருள் நீக்கிய வாறே.
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிதுபண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கேபடருறு காட்சிப் பகலவன் ஈசன்அடருறு மாயையின் ஆரிருள் வீசில்உடலுறு ஞாலத் துறவியின் ஆமே.
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்களிபவ ளத்தினன் காரிருள் நீங்கிஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே.
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்றதேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்பாசம்ஒன் றாகப் பழவினை பற்றறவாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்தானே யிருக்கும் அவனென நண்ணிடும்வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்பானாய் இருக்கப் பரவலும் ஆமே.
ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



