திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2699–2748

ஒன்பதாம் தந்திரம் பாடல் 2699–2748 (50 பாடல்கள்)

அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகிஉகார முதலாக ஓங்கி உதித்துமகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறிநகார முதலாகும் நந்திதன் நாமமே.

அகராதி ஈரெண் கலந்த பரையும்உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்சிகராதி தான்சிவ வேதமே கோணம்நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.

வாயொடு கண்டம் இதயம் மருவுந்திஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே.

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதுமரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே.

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே.

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்றுஉள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.

குருவழி யாய குணங்களில் நின்றுகருவழி யாய கணக்கை அறுக்கவரும்வழி மாள மறுக்கவல் லார்கட்குஅருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே.

வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போதுசெறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

ஏழு வளைகடல் எட்டுக் குலவரையாழும் விசும்பினில் அங்கி மழைவளிதாழு மிருநிலந் தன்மை ய்துகண்டுவாழ நினைக்கில தாலய மாமே.

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராதுஇராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனைஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்தெளிய ஒதிச்சிவாயநம என்னும்குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே.

சிவன்சத்தி சீவன் செறுமல மாயைஅவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேரஅவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயைசிவன்முத லாகச் சிறந்து நிரோதம்பவமது அகன்று பரசிவன் ஆமே.

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்ஓதும் சிவாயமலமற்ற உண்மையே.

நமாதி நனாதி திரோதாயி யாகித்தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவேநமாதி சமாதி சிவமாதல் எண்ணவே.

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயைதிரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே.

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்சிவசிவ என்றிடத் தீவினை மாளும்சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்சிவசிவ என்னச் சிவகதி தானே.

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்பவமது தீரும் பரிசும்அது அற்றால்அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கிஅவாயம் அறவே அடிமைய தாக்கிச்சிவாய சிவசிவ என்றென்றே சிந்தைஅவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டுதுஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனைநெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

அங்கமும் ஆகம வேதமது ஓதினும்எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பதுசங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளேவிழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லைஎழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்திஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனைஅற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்குஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்ஆனந்தம் ஆக அகில சராசரம்ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே.

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்அளியார் சிவகாமி யாகும் சமயக்களியார் பரமும் கருதுறை யந்தக்தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்ஆன நடமாடி ஐங்கரு மத்தாகஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தேதேன்மொழி பாகன் திருநட மாடுமே.

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்டமூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்டதாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்துஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்பூதங்கள் ஆடப் புவனம் முழுதாடநாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.

தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்தாபதர் சத்தர் சமயம் சராசரம்யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்கண்டம் கரியான் கருணை திருவுருக்கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.

கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லைவடம் உற்ற மாவனம் மன்னவன் தானே.

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே.

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடிமூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லாஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே.

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

அடிஆர் பவரே அடியவர் ஆமால்அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரேஅடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்.

அடங்காத என்னை அடக்கி அடிவைத்துஇடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டுநடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனைஇன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனைஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்தநாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடிநீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடிநாளுற அம்பலத் தேயாடும் நாதனே.

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடுஏறும் கழுமுனை இவைசிவ பூமியே.

பூதல மேருப் புறத்தான தெக்கணம்ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்பாதி மதியோன் பயில்திரு அம்பலம்ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

ஒன்பதாம் தந்திரம்பாடல் 2699

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com