உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்பத்தர் பரசும் பசுபதி தானென்றே.
அடியார் அடியார் அடியார்க் கடிமைக்கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்அடியார் அருளால் அவனடி கூடஅடியா னிவனென் றடிமைகொண் டானே.
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்ஊரில் உமாபதி யாகிநின் றானே.
ஒத்துல கேழும் அறியா ஒருவனென்ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லதுமுத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே.
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனைவான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே.
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறிநறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.
உறுதுணை நந்தியை உம்பர் பிரானைபெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்செறிதுணை செய்து சிவனடி சிந்தித்துறுதுணை யாயங்கி யாகிநின் றானே.
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்றதானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்கானவன் என்றுங் கருவரை யானென்றும்ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே.
நிலைபெறு கேடென்று முன்னே படைத்ததலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே.
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணிமெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.
வளங்கனி தேடிய வன்றாட் பறவைஉளங்கனி தேடி யுழிதரும் போதுகளங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றிநலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்துஅம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம்எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.
அறிவுடை யானரு மாமறை யுள்ளேசெறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்தகுறியுடை யானொடுங் கூடுவன் நானே.
அறிவறி வென்றங் கரற்றும் உலகம்அறிவறி யாமையை யாரும் அறியார்அறிவறி யாமை கடந்தறி வானால்அறிவறி யாமை யழகிய வாறே.
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்செறியாச் செறிவே சிவமென லாமே.
காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறைகாவலன் எங்குங் கலந்துநின் றானே.
விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போலஇருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்துவந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ளஎந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே.
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினைநன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போதுதொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கேபடர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தைகடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்இவ்வழி நந்தி இயல்பது தானே.
எறிவது ஞானத் துறைவாள் உருவிஅறிவது னோடேயவ் வாண்டகை யானைச்செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்பறிவது பல்கணப் பற்றுவி டாரே.
ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின்வேதித்து என்னை விலக்கவல் லாரில்லைசோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே.
அந்தக் கருவை யருவை வினைசெய்தற்பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனைசந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



