திருமூலர் அருளிய திருமந்திரம்
12. கலை நிலை

மூன்றாம் தந்திரம் பாடல் 712–723 (12 பாடல்கள்)

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்காதல் வழிசெய்து கங்கை வழிதருங்காதல் வழிசெய்து காக்குவது மாமே.

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.

நிலைபெற நின்றது நேர்தரு வாயுசிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்கலைவழி நின்ற கலப்பை அறியில்மலைவற வாகும் வழியது வாமே.

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானைமடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கிஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.

சாதக மானஅத் தன்மையை நோக்கியேமாதவ மான வழிபாடு செய்திடும்போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்வேதக மாக விளைந்து கிடக்குமே.

கிடந்தது தானே கிளர்பயன் மூன்றுநடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்படர்ந்தது தானேஅப் பங்கய மாகத்தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

தானே எழுந்தஅத் தத்துவ நாயகிஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்தேனே பருகிச் சிவாலய மாகுமே.

திகழும் படியே செறிதரு வாயுஅழியும் படியை அறிகில ராரும்அழியும் படியை அறிந்தபின் நந்திதிகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்சாதன மாகுங் குருவை வழிபட்டுமாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

ஓசையினில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்நாசியினில் மூன்றும் நாவினில் இரண்டும்தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்மாசுஅறு சோதி வகுத்துவைத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #712

1 / 12

0:000:00
12. கலை நிலைபாடல் 712

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com