தொடர்ந்து படிக்கread this section continuously
சோதனை தன்னில் துரிசறக் காணலாம்நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்சாதன மாகுங் குருவை வழிபட்டுமாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.
உரைmeaning
தம்முள் இறைவன் வீற்றிருக்கும் உடலும், இறைவி வீற்றிருக்கும் உயிரும், ஒன்றை விட்டு ஒன்று பிரியும் நாள் எதுவென்பதை, சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றித் தெளிவாக அறியலாம். அதை அறிவதற்குரிய சாதனங்களைத் தரும் குருவை வழிபட்டு, அவற்றை அரிய பெரும் செல்வமாகவே மதித்துக் கொள்ளுங்கள்.
The day on which the body, where the Lord dwells, and the life, where the Lady dwells, part from one another can be known clearly and without the least error through certain tests. Worship the guru who gives the means to know this, and hold them in your regard as a rare, great treasure.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தம்முள் இறைவன் வீற்றிருக்கும் உடலும், இறைவி வீற்றிருக்கும் உயிரும்,
The body, where the Lord dwells, and the life, where the Lady dwells,
- வரி 2Line 2
ஒன்றை விட்டு ஒன்று பிரியும் நாள் எதுவென்பதை,
the day on which they part from one another,
- வரி 3Line 3
சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றித் தெளிவாக அறியலாம்.
can be known clearly and without the least error through certain tests.
- வரி 4Line 4
அதை அறிவதற்குரிய சாதனங்களைத் தரும் குருவை வழிபட்டு, அவற்றை அரிய பெரும் செல்வமாகவே மதித்துக் கொள்ளுங்கள்.
Worship the guru who gives the means to know this, and hold them in your regard as a rare, great treasure.
திருமந்திரம் பாடல் #721





