தொடர்ந்து படிக்கread this section continuously
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானைமடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.
உரைmeaning
மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்சபூதங்களின் தலைவனாகிய இறைவனை, அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று, தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனாகிய இறைவனோடு கலக்கச் செய்யும் யோகியரிடம், அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி, அதிலேயே வீற்றிருந்து அருளுவான் என்கிறது பாடல்.
The verse says that to the yogi who raises the breath, instead of letting it go wastefully through the other nadis, up through the sushumna nadi to mingle with God, the lord of the five elements who stands as the very sound of life's pulse mingled with the breath, with Sivan, the matted locked lord who stands at the crown, that God makes the yogi's own body his fitting bull mount, and comes to dwell there, granting grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்சபூதங்களின் தலைவனாகிய இறைவனை,
God, the lord of the five elements, who stands as the very sound of life's pulse mingled with the breath,
- வரி 2Line 2
அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று,
the verse says that the yogi who raises the breath, instead of letting it go wastefully through the other nadis, up through the sushumna nadi,
- வரி 3Line 3
தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனாகிய இறைவனோடு கலக்கச் செய்யும் யோகியரிடம்,
to mingle with Sivan, the matted locked lord who stands at the crown, that God
- வரி 4Line 4
அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி, அதிலேயே வீற்றிருந்து அருளுவான் என்கிறது பாடல்.
makes the yogi's own body his fitting bull mount, and comes to dwell there, granting grace.
திருமந்திரம் பாடல் #715





