தொடர்ந்து படிக்கread this section continuously
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கிஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.
உரைmeaning
உயிர்களுக்குத் தாம் வாழுகின்ற காலம் எவ்வளவு என்பது தெரியாது. அகயோகத்தின் பெருமையை உணர்ந்து அதனை நோக்கிச் சென்று, தங்களின் மூச்சுக்காற்றைச் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று, சகஸ்ரதளத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து, அதனால் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து எப்போதும் நிலையாக நிற்பவர்கள் சாதகர்கள் ஆகின்றார்கள் என்கிறது பாடல்.
Living beings do not know how long the span of their life is. The verse says that those who come to realize the greatness of aha yoga and turn toward it, raising their breath up through the sushumna nadi to mingle with God who dwells as light in the sahasrara, and who remain always steady, steeped in the bliss that comes of it, are sādhakas.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களுக்குத் தாம் வாழுகின்ற காலம் எவ்வளவு என்பது தெரியாது.
Living beings do not know how long the span of their life is.
- வரி 2Line 2
அகயோகத்தின் பெருமையை உணர்ந்து அதனை நோக்கிச் சென்று,
The verse says that those who come to realize the greatness of aha yoga and turn toward it,
- வரி 3Line 3
தங்களின் மூச்சுக்காற்றைச் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று, சகஸ்ரதளத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து,
raising their breath up through the sushumna nadi to mingle with God who dwells as light in the sahasrara,
- வரி 4Line 4
அதனால் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து எப்போதும் நிலையாக நிற்பவர்கள் சாதகர்கள் ஆகின்றார்கள் என்கிறது பாடல்.
and who remain always steady, steeped in the bliss that comes of it, are sādhakas, the verse says.
திருமந்திரம் பாடல் #716





