தொடர்ந்து படிக்கread this section continuously
சாதக மானஅத் தன்மையை நோக்கியேமாதவ மான வழிபாடு செய்திடும்போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்வேதக மாக விளைந்து கிடக்குமே.
உரைmeaning
பாடல் #716-இல் சொன்ன அந்தத் தன்மையின் பெருமையை உணர்ந்து, மாபெரும் தவமாகிய அந்த யோகத்தைச் செய்து, மூச்சுக்காற்றை மேல்நோக்கிப் பாய்ச்சிச் சேரும்படி செய்தால், இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் குளிகையைப் போலவே, யோகம் செய்பவரின் உடல் பொன்னொளி வீசும் தங்கத்தாலான உடலாக மாறிவிடும்.
Realizing the greatness of that nature spoken of in verse 716, one performs that yoga which is the greatest of tapas, and if the breath is driven upward so that it goes and settles there, then, just as the alchemist's pill turns iron into gold, the body of the one who performs this yoga turns into a body of gold, radiant with a golden light.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #716-இல் சொன்ன அந்தத் தன்மையின் பெருமையை உணர்ந்து,
Realizing the greatness of that nature spoken of in verse 716,
- வரி 2Line 2
மாபெரும் தவமாகிய அந்த யோகத்தைச் செய்து,
one performs that yoga which is the greatest of tapas,
- வரி 3Line 3
மூச்சுக்காற்றை மேல்நோக்கிப் பாய்ச்சிச் சேரும்படி செய்தால்,
and if the breath is driven upward so that it goes and settles there,
- வரி 4Line 4
இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் குளிகையைப் போலவே, யோகம் செய்பவரின் உடல் பொன்னொளி வீசும் தங்கத்தாலான உடலாக மாறிவிடும்.
then, just as the alchemist's pill turns iron into gold, the body of the one who performs this yoga turns into a body of gold, radiant with a golden light.
திருமந்திரம் பாடல் #717





