தொடர்ந்து படிக்கread this section continuously
கிடந்தது தானே கிளர்பயன் மூன்றுநடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்படர்ந்தது தானேஅப் பங்கய மாகத்தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.
உரைmeaning
பாடல் #717-இல் சொன்னபடி அந்த யோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் தோன்றும் பயன்கள் மூன்று. அவை தாமாகவே தோன்றி, நாடிக்குள் நோக்கிச் சென்று, பங்கயமாகப் படர்ந்து, அந்தச் சோதியுள்ளேயே தொடர்ந்து நிலைத்து நிற்கும்.
As said in verse 717, three benefits arise on their own within the yogis who have turned their bodies to gold through that yoga. They arise by themselves, move within the channel, spread out as the lotus, and continue, remaining established within that very light.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #717-இல் சொன்னபடி அந்த யோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் தோன்றும் பயன்கள் மூன்று.
As said in verse 717, three benefits arise on their own within the yogis who have turned their bodies to gold through that yoga.
- வரி 2Line 2
அவை தாமாகவே தோன்றி,
They arise by themselves,
- வரி 3Line 3
நாடிக்குள் நோக்கிச் சென்று, பங்கயமாகப் படர்ந்து,
move within the channel, and spread out as the lotus,
- வரி 4Line 4
அந்தச் சோதியுள்ளேயே தொடர்ந்து நிலைத்து நிற்கும்.
and continue, remaining established within that very light.
திருமந்திரம் பாடல் #718





