தொடர்ந்து படிக்கread this section continuously
நிலைபெற நின்றது நேர்தரு வாயுசிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்கலைவழி நின்ற கலப்பை அறியில்மலைவற வாகும் வழியது வாமே.
உரைmeaning
இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று, சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து, அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால், வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி) கலந்து நிற்பதை அறிந்துகொள்ளலாம். யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி, உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்துகொள்வதே என்கிறது பாடல்.
The verse says that if one draws the breath in through idakalai and pingalai and raises it straight up through the sushumna nadi in the middle, mingling with God, who is of the form of light, at the sahasrara, and stands there unmoving like a statue, one comes, through the nectar that then appears, to know that the gracious form of God, who is light, stays mingled in all sixteen kalais (as given at Padal 713). This knowing, the verse says, is itself the way for yogis to stay always in true wisdom, free from the confusion that māyā creates.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று,
If one draws the breath in through idakalai and pingalai and raises it straight up through the sushumna nadi in the middle,
- வரி 2Line 2
சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து, அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால்,
mingling with God, who is of the form of light, at the sahasrara, and stands there unmoving like a statue,
- வரி 3Line 3
வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி) கலந்து நிற்பதை அறிந்துகொள்ளலாம்.
one comes, through the nectar that then appears, to know that the gracious form of God, who is light, stays mingled in all sixteen kalais (as given at Padal 713).
- வரி 4Line 4
யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி, உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்துகொள்வதே என்கிறது பாடல்.
This knowing, the verse says, is itself the way for yogis to stay always in true wisdom, free from the confusion that māyā creates.
திருமந்திரம் பாடல் #714





