பொன்னாற் சிவசாதனம் பூசி சாதனம்நன்மார்க சாதன நலஞான சாதனந்துன்மார்க சாதனந் தோன்றாத சாதனஞ்சன்மார்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.
கேடறு ஞானி கிளர்ஞான பூபதிபாடறு வேதாந்த சித்தாந்த பாதத்தினூடுறு ஞானோதைய னுண்மை முத்தியோன்பாடுறு சுத்த சைவப்பத்த நித்தனே.
ஆகமொன் பானதி லாதன நாலேழுமோகமி னாலேழு முப்பேத முற்றுடன்வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்றாகமுடிந் ததருஞ் சுத்த சைவமே.
சுத்த மசுத்தந் துரியங்க ளோரேழுஞ்சத்த மசத்துந் தணந்த பராபரையுய்த்த பராபரை யுள்ளாம் பராபரையத்த னருட்சத்தி யாயெங்கு மாயே.
சத்த மசத்துந் தணந்தவன் றானாகிச்சித்த மசித்துந் தெரியாச் சிவோகமாய்முத்தியுள் ளானந்தச் சத்தியுள் மூழ்கினார்சித்தியு மங்கே சிறந்தது தானே.
தன்னைப் பரனைச் சதாசிவ னென்கின்றமன்னைப் பதிபசு பாசத்தை மாசற்றமுன்னைப் பழமல மூழ்கட்டை வீட்டீனையுன்னத் தகுஞ்சுத்த சைவ ருபாயமே.
பூரணந் தன்னிலே வைத்தற்ற வப்போதமாரண மந்த மதித்தானந் தத்தோடுநேரென வீராறு நீதிநெடும் போகங்காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.
மாறாத ஞான மதிபர மாயோகந்தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்பேறான பாவனை பேணி நெறிநிற்றல்கூறாகு ஞான சரிதை குறிப்பிலே.
வேதாந்தங் கண்டோர் பரமித் தியாதரர்நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்வேதாந்த மில்லாத சித்தாந்தங் கண்டுளோர்சாதாரண மன்ன சைவ ருபாயமே.
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகளெண்ணினைச் சென்றணு காம லெண்ணப்படுமண்ணலைச் சென்றணு காப்பசு பாசமே.
ஒன்று மிரண்டு மிலதுமா யொன்றாகநின்று சமைய நிராகார நீங்கியேநின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1427
1 / 11




