தொடர்ந்து படிக்கread this section continuously
தன்னைப் பரனைச் சதாசிவ னென்கின்றமன்னைப் பதிபசு பாசத்தை மாசற்றமுன்னைப் பழமல மூழ்கட்டை வீட்டீனையுன்னத் தகுஞ்சுத்த சைவ ருபாயமே.
உரைmeaning
சாதகர் தன்னையும், பரம்பொருளாகிய இறைவனை சதாசிவமூர்த்தி என்று உணரப்படுகின்ற, அசையும் சக்தியும் அசையாச் சக்தியும் சேர்ந்து செயல்படுகின்ற பதியாகிய இறையையும், பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய பற்றுக்களையும், குற்றமில்லாத இறைவனிடமிருந்து ஆசையினால் பிரிந்துவந்த பிறகு குற்றமடைந்து பழமையான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற மலத்தையும், வினைகளால் கட்டப்பட்டிருக்கும் ஆன்மா வசிக்கும் வீடாகிய இந்த உடலையும், தனக்கு உள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக உணர்ந்துகொள்வதற்கு ஏதுவாக இருப்பது, சுத்தமான சைவத்தைக் கடைப்பிடிக்கும் சைவர்களின் வழியாகிய மார்க்க சைவமே ஆகும்.
What helps the practitioner to research within himself and realize fully, himself and God, the Supreme who is known as Sadasivamurti, God as Master acting joined with the moving power and the unmoving power, the soul as the bound creature, the ties that are bondage, the impurity that has clung on since ancient time after parting by desire from the faultless God and becoming stained, and this body, the house in which the soul, bound by deeds, dwells, is Marga Saivam, the path of the Saivas who hold to pure Saivism.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர் தன்னையும், பரம்பொருளாகிய இறைவனை சதாசிவமூர்த்தி என்று உணரப்படுகின்ற,
The practitioner researches within himself and realizes fully, himself and God, the Supreme who is known as Sadasivamurti,
- வரி 2Line 2
அசையும் சக்தியும் அசையாச் சக்தியும் சேர்ந்து செயல்படுகின்ற பதியாகிய இறையையும், பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய பற்றுக்களையும், குற்றமில்லாத இறைவனிடமிருந்து ஆசையினால் பிரிந்துவந்த பிறகு குற்றமடைந்து,
God as Master acting joined with the moving power and the unmoving power, the soul as the bound creature, the ties that are bondage, and, after parting by desire from the faultless God and becoming stained,
- வரி 3Line 3
பழமையான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற மலத்தையும், வினைகளால் கட்டப்பட்டிருக்கும் ஆன்மா வசிக்கும் வீடாகிய இந்த உடலையும்,
the impurity that has clung on since ancient time, and this body, the house in which the soul, bound by deeds, dwells,
- வரி 4Line 4
தனக்கு உள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக உணர்ந்துகொள்வதற்கு ஏதுவாக இருப்பது, சுத்தமான சைவத்தைக் கடைப்பிடிக்கும் சைவர்களின் வழியாகிய மார்க்க சைவமே ஆகும்.
this research and full inward realization is Marga Saivam, the path of the Saivas who hold to pure Saivism.
திருமந்திரம் பாடல் #1432





