தொடர்ந்து படிக்கread this section continuously
பூரணந் தன்னிலே வைத்தற்ற வப்போதமாரண மந்த மதித்தானந் தத்தோடுநேரென வீராறு நீதிநெடும் போகங்காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.
உரைmeaning
பாடல் #1432 இல் உள்ள அனைத்துத் தத்துவங்களையும் முறைப்படி தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து உணர்ந்து, ஆதியிலிருந்தே சேர்ந்திருக்கும் மலத்தை நீக்குகின்ற இறைவன் அருளிய போதனைகளால், வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற இறைவனைத் தொழுது வணங்கி, இறையருளால் தனக்குள் பெற்ற பேரின்பத்தில் சீராக இருக்கும்படி நீண்ட காலம் சாதனை செய்கின்ற சாதகங்களுக்குக் காரணமாக இருப்பது, மார்க்க சைவ முறைப்படி நடக்கும் சுத்தமான சைவர்கள் தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து பெற்ற இறை காட்சியே ஆகும்.
By the teachings graciously given by God, who removes the impurity that has clung on since the beginning, through fully and duly researching and realizing within oneself all the principles set out in verse 1432, worshipping God, who is the limit of the Vedas, and through long and sustained sadhana undertaken so as to remain steady in the supreme bliss gained within by God's grace: this is the ground for the divine vision that the Suddha Saivas, who walk by the way of Marga Saivam, gain by fully researching within themselves.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1432 இல் உள்ள அனைத்துத் தத்துவங்களையும் முறைப்படி தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து உணர்ந்து, ஆதியிலிருந்தே சேர்ந்திருக்கும் மலத்தை நீக்குகின்ற இறைவன் அருளிய போதனைகளால்,
By the teachings graciously given by God, who removes the impurity that has clung on since the beginning, through fully and duly researching and realizing within oneself all the principles set out in verse 1432,
- வரி 2Line 2
வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற இறைவனைத் தொழுது வணங்கி, இறையருளால் தனக்குள் பெற்ற பேரின்பத்தில்,
worshipping God, who is the limit of the Vedas, in the supreme bliss gained within by God's grace,
- வரி 3Line 3
சீராக இருக்கும்படி நீண்ட காலம் சாதனை செய்கின்ற சாதகங்களுக்குக் காரணமாக இருப்பது,
through long and sustained sadhana undertaken so as to remain steady in that bliss,
- வரி 4Line 4
மார்க்க சைவ முறைப்படி நடக்கும் சுத்தமான சைவர்கள் தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து பெற்ற இறை காட்சியே ஆகும்.
this is the ground for the divine vision that the Suddha Saivas, who walk by the way of Marga Saivam, gain by fully researching within themselves.
திருமந்திரம் பாடல் #1433





