திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1434

ஐந்தாம் தந்திரம்3. மார்க்க சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மாறாத ஞான மதிபர மாயோகந்தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்பேறான பாவனை பேணி நெறிநிற்றல்கூறாகு ஞான சரிதை குறிப்பிலே.

உரை

எந்தக் காலத்திலும் மாறாத உண்மையான ஞானத்தைத் தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவால் பரம்பொருளை அடையும் மாபெரும் யோகத்தைச் செய்வதும், அதன் பயனால் தெளிவாக இறையை உணர்ந்துகொள்ளாத சிந்தனையைத் தெளிவுபடுத்தி சிவம் எனும் பேரன்பாக ஆக்குவதும், அதன் பயனால் கிடைப்பதற்கு மிகவும் அரிய பேறாக இருக்கும் அருள் பாவனைகளைப் பெற்று அவற்றைக் கடைப்பிடித்து அருள் வழியே மாறாமல் நிற்பதும் ஆகிய இந்த மூன்றும், மார்க்க சைவத்தின் ஞான வழியைக் கடைப்பிடிக்கும் சைவர்கள் குறிப்பாக வைத்துச் சாதகம் செய்கின்ற சரியை எனும் முறைக்கு அங்கங்கள் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    எந்தக் காலத்திலும் மாறாத உண்மையான ஞானத்தைத் தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவால் பரம்பொருளை அடையும் மாபெரும் யோகத்தைச் செய்வதும்,

  • வரி 2

    அதன் பயனால் தெளிவாக இறையை உணர்ந்துகொள்ளாத சிந்தனையைத் தெளிவுபடுத்தி சிவம் எனும் பேரன்பாக ஆக்குவதும்,

  • வரி 3

    அதன் பயனால் கிடைப்பதற்கு மிகவும் அரிய பேறாக இருக்கும் அருள் பாவனைகளைப் பெற்று அவற்றைக் கடைப்பிடித்து அருள் வழியே மாறாமல் நிற்பதும் ஆகிய இந்த மூன்றும்,

  • வரி 4

    மார்க்க சைவத்தின் ஞான வழியைக் கடைப்பிடிக்கும் சைவர்கள் குறிப்பாக வைத்துச் சாதகம் செய்கின்ற சரியை எனும் முறைக்கு அங்கங்கள் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1434

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout