திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1435

ஐந்தாம் தந்திரம்3. மார்க்க சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வேதாந்தங் கண்டோர் பரமித் தியாதரர்நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்வேதாந்த மில்லாத சித்தாந்தங் கண்டுளோர்சாதாரண மன்ன சைவ ருபாயமே.

உரை

வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளைக் கண்டு அறிந்துகொண்டவர்கள், மிகவும் உன்னதமான நிலையில் மெய் ஞானம் உலக ஞானம் ஆகிய அனைத்தையும் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள். நாதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளைக் கண்டு அறிந்துகொண்டவர்கள், சித்தத்தில் நடுக்கம் சிறிதும் இல்லாமல் எப்போதும் இறைவனையே சிந்தித்துக்கொண்டிருக்கும் யோகிகள் ஆவார்கள். இப்படி இல்லாமல், வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்துகொள்ளாத, வெறும் உலக அறிவுக்கு எல்லையைக் கண்டிருக்கின்ற சைவர்கள், சாதாரணம் என்று சொல்லப்படும் பொதுவான சைவர்களின் வழியையே கடைப்பிடிக்கின்றவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளைக் கண்டு அறிந்துகொண்டவர்கள், மிகவும் உன்னதமான நிலையில் மெய் ஞானம் உலக ஞானம் ஆகிய அனைத்தையும் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

  • வரி 2

    நாதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளைக் கண்டு அறிந்துகொண்டவர்கள், சித்தத்தில் நடுக்கம் சிறிதும் இல்லாமல் எப்போதும் இறைவனையே சிந்தித்துக்கொண்டிருக்கும் யோகிகள் ஆவார்கள்.

  • வரி 3

    இப்படி இல்லாமல், வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்துகொள்ளாத,

  • வரி 4

    வெறும் உலக அறிவுக்கு எல்லையைக் கண்டிருக்கின்ற சைவர்கள், சாதாரணம் என்று சொல்லப்படும் பொதுவான சைவர்களின் வழியையே கடைப்பிடிக்கின்றவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1435

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout