திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1436

ஐந்தாம் தந்திரம்3. மார்க்க சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகளெண்ணினைச் சென்றணு காம லெண்ணப்படுமண்ணலைச் சென்றணு காப்பசு பாசமே.

உரை

பரந்து விரிந்திருக்கின்ற வானத்தில் எவ்வளவுதான் உயரே மேகங்கள் சென்றாலும், அவை விண்ணுலகத்தைச் சென்றடைவதில்லை. பல விதமான காட்சிகளைக் கண்டாலும், அந்தக் காட்சிகள் கண்களில் வந்து ஒட்டிக்கொள்வதில்லை. அது போலவே, உலகத்தில் அறிந்தவற்றையே எண்ணிக்கொண்டிருக்கின்ற எண்ணங்களால், உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனைச் சென்றடைய முடியாதபடி பாசமானது ஆன்மாவைத் தடுத்துக்கொண்டிருக்கின்றது. ஆகவே, இறைவனை அடைய வேண்டுமென்றால், மார்க்க சைவத்தின் வழியைக் கடைப்பிடித்து, அதன் பயனால் பாசத்தளை நீங்கி, உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பரந்து விரிந்திருக்கின்ற வானத்தில் எவ்வளவுதான் உயரே மேகங்கள் சென்றாலும், அவை விண்ணுலகத்தைச் சென்றடைவதில்லை.

  • வரி 2

    பல விதமான காட்சிகளைக் கண்டாலும், அந்தக் காட்சிகள் கண்களில் வந்து ஒட்டிக்கொள்வதில்லை.

  • வரி 3

    அது போலவே, உலகத்தில் அறிந்தவற்றையே எண்ணிக்கொண்டிருக்கின்ற எண்ணங்களால், உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனைச் சென்றடைய முடியாதபடி பாசமானது ஆன்மாவைத் தடுத்துக்கொண்டிருக்கின்றது.

  • வரி 4

    ஆகவே, இறைவனை அடைய வேண்டுமென்றால், மார்க்க சைவத்தின் வழியைக் கடைப்பிடித்து, அதன் பயனால் பாசத்தளை நீங்கி, உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #1436

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout