தொடர்ந்து படிக்கread this section continuously
ஒன்று மிரண்டு மிலதுமா யொன்றாகநின்று சமைய நிராகார நீங்கியேநின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.
உரைmeaning
நான் என்ற ஒன்றை நினைப்பதும் இல்லாமல், நானும் இறைவனும் என்று இரண்டாக நினைப்பதும் இல்லாமல், நானும் இறைவனும் வேறுவேறு என்று நினைப்பதும் இல்லாமல், அனைத்தும் இறைவன் ஒருவன் மட்டுமே எனும் எண்ணத்தில் நின்று, உலக நியதிகளில் பல விதமாக இறைவன் என்று உருவாக்கி வைத்திருக்கும் உருவங்களை எல்லாம் நீக்கிவிட்டு, உருவமே இல்லாத அன்பில் நின்று, பரம்பொருளாகிய இறைவனின் பேரன்பின் வடிவத்தை இறைவனது திருவடியின் அருளினால் சென்றடைந்து, அன்பே சிவமாக ஆகிவிடுவதும், சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பேரறிவைப் பெறுவதுமே மார்க்க சைவத்தின் வழிமுறைகள் ஆகும்.
Not thinking the one thought "I," not thinking of self and God as two, not thinking of self and God as different from each other, but standing in the thought that all is God alone; casting off every one of the many forms that worldly custom has fashioned and set up as God; standing in a love that has no form at all; reaching, through the grace of God's sacred feet, the form that is the supreme love of God, who is the Supreme; and thereby becoming, love itself, one with Sivam, and gaining the supreme knowledge that is the very limit of thought: these are the ways of Marga Saivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நான் என்ற ஒன்றை நினைப்பதும் இல்லாமல், நானும் இறைவனும் என்று இரண்டாக நினைப்பதும் இல்லாமல் நினைக்காமல் இருந்து, அனைத்தும் இறைவன் ஒருவன் மட்டுமே எனும் எண்ணத்தில் நிற்றல்;
Not thinking the one thought "I," not thinking of self and God as two, but standing in the thought that all is God alone;
- வரி 2Line 2
நானும் இறைவனும் வேறுவேறு என்று நினைப்பதும் இல்லாமல், உலக நியதிகளில் பல விதமாக இறைவன் என்று உருவாக்கி வைத்திருக்கும் உருவங்களை எல்லாம் நீக்கிவிட்டு விடுதல்;
not thinking of self and God as different from each other, and casting off every one of the many forms that worldly custom has fashioned and set up as God;
- வரி 3Line 3
உருவமே இல்லாத அன்பில் நின்று, பரம்பொருளாகிய இறைவனின் பேரன்பின் வடிவத்தை இறைவனது திருவடியின் அருளினால் சென்றடைதல்;
standing in a love that has no form at all, and reaching, through the grace of God's sacred feet, the form that is the supreme love of God, who is the Supreme;
- வரி 4Line 4
அன்பே சிவமாக ஆகிவிடுவதும், சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பேரறிவைப் பெறுவதுமே மார்க்க சைவத்தின் வழிமுறைகள் ஆகும்.
and thereby becoming, love itself, one with Sivam, and gaining the supreme knowledge that is the very limit of thought: these are the ways of Marga Saivam.
திருமந்திரம் பாடல் #1437





