திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1438

ஐந்தாம் தந்திரம்4. கடுஞ் சுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வேடங் கடந்து விகிர்தன்றன் பால்மேவியாடம்பர மின்றி யாசாபாசஞ் செற்றுப்பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்சாடுஞ் சிவபோதகர் சுத்த சைவரே.

உரை

வெளிப்புற வேடங்கள் எதுவும் இன்றி, உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவன் மேல் மட்டும் எண்ணங்களை வைத்து, எந்தவிதமான ஆடம்பரங்களும் இல்லாமல் ஆசைகளையும் பாசங்களையும் நீக்கிவிட்டு, பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பாசத் தளைகளும் இறைவனிடமிருந்து ஆன்மா தனித்திருக்கும் பசு தத்துவமும் அழிந்துபோகும்படி செய்து, இறைவனை மட்டுமே சார்ந்திருந்து இறைவன் அருளிய போதனைகளை முறைப்படி கடைப்பிடிப்பவரே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    வெளிப்புற வேடங்கள் எதுவும் இன்றி, உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவன் மேல் மட்டும் எண்ணங்களை வைத்து,

  • வரி 2

    எந்தவிதமான ஆடம்பரங்களும் இல்லாமல் ஆசைகளையும் பாசங்களையும் நீக்கிவிட்டு,

  • வரி 3

    பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பாசத் தளைகளும் இறைவனிடமிருந்து ஆன்மா தனித்திருக்கும் பசு தத்துவமும் அழிந்துபோகும்படி செய்து,

  • வரி 4

    இறைவனை மட்டுமே சார்ந்திருந்து இறைவன் அருளிய போதனைகளை முறைப்படி கடைப்பிடிப்பவரே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1438

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout