திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1439

ஐந்தாம் தந்திரம்4. கடுஞ் சுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உடலான வைந்தையு மோரொன்று மைந்துமடலான மாமாயை மற்றுள்ள நீவப்படலான கேவலப் பாசந் துடைத்துத்திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்கமே.

உரை

மனித உடலாக இருக்கின்ற ஐந்து பூதங்களையும், அதை ஒன்றின்மேல் ஒன்றாக மூடியிருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று, அதையும் தாண்டி விரிந்திருக்கின்ற சுத்த மாயையையும் மற்றும் இருக்கின்ற அனைத்துத் தத்துவங்களையும் தாண்டிச் சென்று, இறைவனை அடைவதற்குத் தடையாக மாயையிலேயே மயங்கியிருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கிவிட்டு, உறுதியாகத் தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்றுக் கவனித்தபடியே இருப்பதே, சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    மனித உடலாக இருக்கின்ற ஐந்து பூதங்களையும், அதை ஒன்றின்மேல் ஒன்றாக மூடியிருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று,

  • வரி 2

    அதையும் தாண்டி விரிந்திருக்கின்ற சுத்த மாயையையும் மற்றும் இருக்கின்ற அனைத்துத் தத்துவங்களையும் தாண்டிச் சென்று,

  • வரி 3

    இறைவனை அடைவதற்குத் தடையாக மாயையிலேயே மயங்கியிருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கிவிட்டு,

  • வரி 4

    உறுதியாகத் தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்றுக் கவனித்தபடியே இருப்பதே, சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.

திருமந்திரம் பாடல் #1439

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout