தொடர்ந்து படிக்கread this section continuously
சுத்தஞ் சிவனுரை தானதுட் டோயாமல்முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலமத்தகை யான்மா வரனை யடைந்தற்றாற்சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.
உரைmeaning
மாசில்லாத பரம்பொருளாகிய இறைவன், பாடல் #1438 இல் உள்ளபடி சொல்லி அருளிய போதனைகளைத் தமக்குள் உள்வாங்கிக்கொண்டு, அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து, இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து, அதன் மூலம் முக்திக்கு மூலப்பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையைத் தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது, இறைவனைச் சென்றடைந்து, அவன் அருளால் மாசில்லாத சிவம் எனும் பரம்பொருளாகத் தாமும் ஆகியிருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.
Those whose soul, having taken within itself the teachings graciously spoken by God, the stainless Supreme, as in verse 1438, and having thought upon and researched them without ceasing, having realized that the meaning of every single word in those teachings is a seed for the state of liberation, and having thereby themselves gained the nature of God, who is the root source of liberation, goes and reaches God, and, by his grace, itself becomes the stainless Supreme called Sivam, are the Kadum Suddha Saivas.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மாசில்லாத பரம்பொருளாகிய இறைவன், பாடல் #1438 இல் உள்ளபடி சொல்லி அருளிய போதனைகளைத் தமக்குள் உள்வாங்கிக்கொண்டு, அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து,
Having taken within itself the teachings graciously spoken by God, the stainless Supreme, as in verse 1438, and having thought upon and researched them without ceasing,
- வரி 2Line 2
இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து,
having realized that the meaning of every single word in those teachings is a seed for the state of liberation,
- வரி 3Line 3
அதன் மூலம் முக்திக்கு மூலப்பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையைத் தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது, இறைவனைச் சென்றடைந்து,
and having thereby themselves gained the nature of God, who is the root source of liberation, the practitioner's soul goes and reaches God,
- வரி 4Line 4
அவன் அருளால் மாசில்லாத சிவம் எனும் பரம்பொருளாகத் தாமும் ஆகியிருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.
and, by his grace, itself becomes the stainless Supreme called Sivam: such alone are the Kadum Suddha Saivas.
திருமந்திரம் பாடல் #1440





