தொடர்ந்து படிக்கread this section continuously
நானென்றுந் தானென்று நாடிநான் சாரவேதானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்றானென்று நானென்றுஞ் சாற்றுகி லேனே.
உரைmeaning
நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும், தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து, நான் இறைவனைச் சார்ந்திருக்கும்போது, இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல், தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன் தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்குத் தந்தருளியதால், இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறுவேறு என்று பார்க்கின்ற தத்துவத்தைச் சார்ந்து நிற்காமல், அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.
Searching and wandering, asking where I, who am the soul, exist, and where God, who dwells within me, exists, when I came to depend on God, he graciously gave me the truth that there is no such thing as two separate principles, God and the soul, standing apart, but that God, the Supreme who alone stands as everything, is himself both "he" and "I," and all of it. Because of that, I no longer hold to the notion that sees "he" and "I," the soul and God, as different from each other; I remain now knowing that all is God, one alone.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும், தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து, நான் இறைவனைச் சார்ந்திருக்கும்போது,
Searching and wandering, asking where I, who am the soul, exist, and where God, who dwells within me, exists, when I came to depend on God,
- வரி 2Line 2
இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல், தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன்,
he showed there is no such thing as two separate principles, God and the soul, standing apart, but that God, the Supreme who alone stands as everything,
- வரி 3Line 3
தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்குத் தந்தருளியதால்,
is himself both "he" and "I," and, because he graciously gave me this truth that all is himself alone,
- வரி 4Line 4
இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறுவேறு என்று பார்க்கின்ற தத்துவத்தைச் சார்ந்து நிற்காமல், அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.
I no longer hold to the notion that sees "he" and "I," the soul and God, as different from each other; I remain now knowing that all is God, one alone.
திருமந்திரம் பாடல் #1441





