திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1442

ஐந்தாம் தந்திரம்4. கடுஞ் சுத்த சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தலாற்றரி தாகிய வைந்து மடங்கிடுமேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்பார்ப்பர சாயுச்சிய மாகும் பதியே.

உரை

சார்ந்து நிற்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற, அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம் இறையருளால் கிடைக்கப் பெற்றால், ஆசைகளை நீக்குவதற்கு மிகவும் அரியதாகிய ஐந்து புலன்களும் அடங்கிவிடும். அதன்பிறகு, மேலே திகழ்கின்ற உண்மை ஞானமானது, இருளான வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒளியைக் கொடுப்பது போல, மாயை நீங்கிய உண்மையை விளங்கவைக்கும் ஒளியாக நிற்கும். அப்போது, இந்த உலகத்திலேயே கடும் சுத்த சைவத்தைக் கடைப்பிடிக்கின்ற சைவர்கள், தாம் இருக்கின்ற இடத்திலேயே பரம்பொருளோடு எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும் நிலையைப் பெறுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சார்ந்து நிற்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற, அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம் இறையருளால் கிடைக்கப் பெற்றால்,

  • வரி 2

    ஆசைகளை நீக்குவதற்கு மிகவும் அரியதாகிய ஐந்து புலன்களும் அடங்கிவிடும்.

  • வரி 3

    அதன்பிறகு, மேலே திகழ்கின்ற உண்மை ஞானமானது, இருளான வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒளியைக் கொடுப்பது போல, மாயை நீங்கிய உண்மையை விளங்கவைக்கும் ஒளியாக நிற்கும்.

  • வரி 4

    அப்போது, இந்த உலகத்திலேயே கடும் சுத்த சைவத்தைக் கடைப்பிடிக்கின்ற சைவர்கள், தாம் இருக்கின்ற இடத்திலேயே பரம்பொருளோடு எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும் நிலையைப் பெறுவார்கள்.

திருமந்திரம் பாடல் #1442

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout