தொடர்ந்து படிக்கread this section continuously
சத்த மசத்துந் தணந்தவன் றானாகிச்சித்த மசித்துந் தெரியாச் சிவோகமாய்முத்தியுள் ளானந்தச் சத்தியுள் மூழ்கினார்சித்தியு மங்கே சிறந்தது தானே.
உரைmeaning
நிலையான ஆன்மாவையும் நிலையில்லாத உடலையும் கடந்து, பாடல் #1430 இல் உள்ளபடி துரியாதீத நிலையில் இருக்கின்ற சாதகர், தானே இறைவனாகி, உலக அறிவாலும் அறியாமையாலும் தெரிந்துகொள்ள முடியாத சிவயோகத்தின் வடிவமாய், முக்தி நிலைக்குள் இருக்கின்ற பேரின்பத்தின் சக்திக்குள் மூழ்கியிருந்து, பேரறிவு ஞானத்தைப் பெற்று, அந்த முக்தி நிலைக்குள் மேன்மையுடன் சிறந்து விளங்குகின்றார்.
Passing beyond the permanent soul and the impermanent body, the practitioner who stands, as in verse 1430, in the turiyatita state, himself becomes God, taking the form of Siva-yoga that cannot be known by worldly knowledge or by ignorance; remaining immersed within the power of supreme bliss that lies within the state of liberation, he gains supreme wisdom, and shines in surpassing excellence within that state of liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நிலையான ஆன்மாவையும் நிலையில்லாத உடலையும் கடந்து, பாடல் #1430 இல் உள்ளபடி துரியாதீத நிலையில் இருக்கின்ற சாதகர்,
Passing beyond the permanent soul and the impermanent body, the practitioner who stands, as in verse 1430, in the turiyatita state,
- வரி 2Line 2
தானே இறைவனாகி, உலக அறிவாலும் அறியாமையாலும் தெரிந்துகொள்ள முடியாத சிவயோகத்தின் வடிவமாய் இருக்கின்றார்.
himself becomes God, taking the form of Siva-yoga that cannot be known by worldly knowledge or by ignorance.
- வரி 3Line 3
முக்தி நிலைக்குள் இருக்கின்ற பேரின்பத்தின் சக்திக்குள் மூழ்கியிருந்து,
Remaining immersed within the power of supreme bliss that lies within the state of liberation,
- வரி 4Line 4
பேரறிவு ஞானத்தைப் பெற்று, அந்த முக்தி நிலைக்குள் மேன்மையுடன் சிறந்து விளங்குகின்றார்.
he gains supreme wisdom, and shines in surpassing excellence within that state of liberation.
திருமந்திரம் பாடல் #1431





