திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1430

ஐந்தாம் தந்திரம்3. மார்க்க சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சுத்த மசுத்தந் துரியங்க ளோரேழுஞ்சத்த மசத்துந் தணந்த பராபரையுய்த்த பராபரை யுள்ளாம் பராபரையத்த னருட்சத்தி யாயெங்கு மாயே.

உரை

சுத்த மாயையிலும் அசுத்த மாயையிலும் துரியம் துரியாதீதம் என்று சேர்ந்து மொத்தம் ஏழு விதமான நிலைகளையும் அனுபவிக்கும் நிலையாக இருக்கின்ற ஆன்மாவையும், நிலையற்றதாக இருக்கின்ற உடலையும் கடந்து, இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கின்ற பரம்பொருளே அனைத்திற்கும் உள்ளே இருந்து இயக்கி, அவற்றை மேல் நிலைக்குக் கொண்டு செல்கின்ற பரம்பொருளாகும். அதுவே அப்பனாகவும் அருள்மயமான சக்தியாகவும் ஆகி, அனைத்துமாகவும் ஆகி இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    சுத்த மாயையிலும் அசுத்த மாயையிலும் துரியம் துரியாதீதம் என்று சேர்ந்து மொத்தம் ஏழு விதமான நிலைகளையும் அனுபவிக்கும் நிலையாக ஆன்மா இருக்கிறது.

  • வரி 2

    அந்த ஆன்மாவையும், நிலையற்றதாக இருக்கின்ற உடலையும் கடந்து நிற்பது இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கின்ற பரம்பொருள்.

  • வரி 3

    அந்தப் பரம்பொருளே அனைத்திற்கும் உள்ளே இருந்து இயக்கி, அவற்றை மேல் நிலைக்குக் கொண்டு செல்கின்ற பரம்பொருளாகும்.

  • வரி 4

    அதுவே அப்பனாகவும் அருள்மயமான சக்தியாகவும் ஆகி, அனைத்துமாகவும் ஆகி இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1430

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout