தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகமொன் பானதி லாதன நாலேழுமோகமி னாலேழு முப்பேத முற்றுடன்வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்றாகமுடிந் ததருஞ் சுத்த சைவமே.
உரைmeaning
இறைவனை அடைவதற்கு வழிவகுக்கும் ஆகமங்கள் ஒன்பது வகையாகவும், அவற்றின் முழுமையான சொத்தாக இருபத்தெட்டு ஆகமங்களாகவும் இருக்கின்றன. எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இந்த இருபத்தெட்டு ஆகமங்களையும் கற்று உணர்ந்து, அவற்றின் பயனால் இறைவனை அடைவதற்குத் தடையாக இருக்கின்ற மூன்று விதமான பற்றுக்களை விட்டு விலகுவது எப்படி என்பதை ஆராய்ந்து அறிந்துகொண்டு, அதனுடன் சேர்ந்து எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல், வேதங்களுக்கு எல்லையாகவும் ஞானத்திற்கு எல்லையாகவும் இருக்கின்ற உண்மைப் பொருளாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து, தான் எனும் நிலை முடிந்து இறைவனும் தானும் வேறுவேறு இல்லை எனும் நிலையை அடைவதே கிடைப்பதற்கு மிகவும் அரிதான பெரும் பேறாகிய சுத்த சைவம் ஆகும்.
The agamas that pave the way to reaching God are of nine kinds, and their full wealth amounts to twenty-eight agamas. Learning and realizing all twenty-eight without any craving, and, through what they teach, researching and coming to know how to let go of the three kinds of attachment that stand as obstacles to reaching God, and, along with that, without any thought remaining, merging as one with God, the true substance who is the limit of the Vedas and the limit of wisdom, so that the state of "I" comes to an end and one attains the state where God and oneself are no longer different: that alone is Suddha Saivam, the great attainment most rare to obtain.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்கு வழிவகுக்கும் ஆகமங்கள் ஒன்பது வகையாகவும், அவற்றின் முழுமையான சொத்தாக இருபத்தெட்டு ஆகமங்களாகவும் இருக்கின்றன.
The agamas that pave the way to reaching God are of nine kinds, and their full wealth amounts to twenty-eight agamas.
- வரி 2Line 2
எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இந்த இருபத்தெட்டு ஆகமங்களையும் கற்று உணர்ந்து, அவற்றின் பயனால் இறைவனை அடைவதற்குத் தடையாக இருக்கின்ற மூன்று விதமான பற்றுக்களை விட்டு விலகுவது எப்படி என்பதை ஆராய்ந்து அறிந்துகொண்டு,
Learning and realizing all twenty-eight without any craving, and, through what they teach, researching and coming to know how to let go of the three kinds of attachment that stand as obstacles to reaching God,
- வரி 3Line 3
அதனுடன் சேர்ந்து எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல், வேதங்களுக்கு எல்லையாகவும் ஞானத்திற்கு எல்லையாகவும் இருக்கின்ற உண்மைப் பொருளாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து,
and, along with that, without any thought remaining, merging as one with God, the true substance who is the limit of the Vedas and the limit of wisdom,
- வரி 4Line 4
தான் எனும் நிலை முடிந்து இறைவனும் தானும் வேறுவேறு இல்லை எனும் நிலையை அடைவதே கிடைப்பதற்கு மிகவும் அரிதான பெரும் பேறாகிய சுத்த சைவம் ஆகும்.
so that the state of "I" comes to an end and one attains the state where God and oneself are no longer different: that alone is Suddha Saivam, the great attainment most rare to obtain.
திருமந்திரம் பாடல் #1429





