திருமூலர் அருளிய திருமந்திரம்
13. அபக்குவன்

ஆறாம் தந்திரம் பாடல் 1680–1689 (10 பாடல்கள்)

குருட்டினை நீங்குங் குருவினைக் கொள்ளார்குருட்டினை நீங்காக் குருவினைக் கொள்வர்குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடிநினைக்கி லதனி னிழலையுங் காணார்வினைப் பயன்போக விளக்கியுங் கொள்ளார்புழைக்கடைக் கிச்சித்துப் போகின்ற வாறே.

ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள்வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்தாய்முலை யாவ தறியார் தமருளொருவூனிலை செய்யு முருவிலி தானே.

வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்கநீயொன்று செய்ய வுறுதி நடந்தாகாதீயென்றிங் குன்னைத் தெளிந்தேன் தெளிந்தபின்பேயென்றிங் கென்னை பிறர்தெளி யாரே.

பஞ்சத் துரோகத் ததிபாதகர் தம்மைப்பஞ்ச சமையத்தோர் வேந்த னருந்தெண்டம்விஞ்சத்த வப்புவி வேறே விடாவிடிற்பஞ்சத் துள்ளாகிப் புவியெங்கும் பாட்குமே.

தவத்திடை நின்றவர் தாமுண்ணுங் கன்மஞ்சிவத்திடை நின்றது தேவ ரறியார்தவத்திடை நின்றறி யாதவ ரெல்லாம்பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

கன்றல் கருதலுங் கருமை சேர்தலுந்தின்றல் சுவைத்தலுந் தீமைகள் செய்தலும்பின்றமை யென்றலும் பெருமை கூறலுமென்றிவை யிறைபா லிசைகை யல்லவே.

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப்பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறுபித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

மன்னு மலமைந்தும் மாற்றும் வகையோரான்துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான்பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதானன்னிய னாவா னசற்சீட னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1680

1 / 10

0:000:00
13. அபக்குவன்பாடல் 1680

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com