திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1687

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

உரை

மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியைப் பார்க்கவும் மாட்டார்கள். மாயையாகிய இருள் நீங்கிய ஜோதியின் வெளிச்சத்தில், தம்மைச் சுற்றி உள்ள அனைத்திலும் இருள் நீங்கிய உண்மை ஞானத்தைக் காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள். அவர்களைப் போல் இல்லாமல், தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்துத் தியானித்து மாயையைக் கட்டுங்கள். அப்போது இருள் நீங்கித் தெரிகின்ற ஜோதியாகிய இறைவனைக் காணுங்கள். இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களைக் கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்; அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியைப் பார்க்கவும் மாட்டார்கள்.

  • வரி 2

    மாயையாகிய இருள் நீங்கிய ஜோதியின் வெளிச்சத்தில், தம்மைச் சுற்றி உள்ள அனைத்திலும் இருள் நீங்கிய உண்மை ஞானத்தைக் காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள்.

  • வரி 3

    அவர்களைப் போல் இல்லாமல், தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்துத் தியானித்து மாயையைக் கட்டுங்கள்; அப்போது இருள் நீங்கித் தெரிகின்ற ஜோதியாகிய இறைவனைக் காணுங்கள்.

  • வரி 4

    இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களைக் கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1687

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout