திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1688

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப்பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறுபித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

உரை

பிறக்கும்போதே உடலுக்குள் வைக்கப்பட்ட, இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும், அதைக் கட்டி இருக்கின்ற மலங்களையும் நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான வழிமுறையையும் இறைவன் வைத்து அருளி இருக்கின்றான். அதை உணர்ந்து, அந்த வழிமுறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை இல்லாமல் செய்து முக்தி நிலையைப் பெற்றவனாக ஆகாமல், தாம் செல்ல வேண்டிய வழிமுறையிலிருந்து மாறுதல் அடைந்து, உலகப் பற்றுக்களுக்கான தத்துவங்களையே நினைத்துக்கொண்டு, இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்ளாமல், உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து, உலக ஆசைகளில் மயங்கி இருக்கின்ற பக்குவமில்லாத சீடனுக்கு, உண்மையான ஞானத்தைக் குருவானவர்கள் கொடுக்க மாட்டார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பிறக்கும்போதே உடலுக்குள் வைக்கப்பட்ட, இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும், அதைக் கட்டி இருக்கின்ற மலங்களையும் நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான வழிமுறையையும் இறைவன் வைத்து அருளி இருப்பதை உணராமல்,

  • வரி 2

    அந்த வழிமுறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை இல்லாமல் செய்து முக்தி நிலையைப் பெற்றவனாக ஆகாமல், தாம் செல்ல வேண்டிய வழிமுறையிலிருந்து மாறுதல் அடைந்து,

  • வரி 3

    உலகப் பற்றுக்களுக்கான தத்துவங்களையே நினைத்துக்கொண்டு, இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்ளாமல், உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து,

  • வரி 4

    உலக ஆசைகளில் மயங்கி இருக்கின்ற அந்தப் பக்குவமில்லாத சீடனுக்கு, உண்மையான ஞானத்தைக் குருவானவர்கள் கொடுக்க மாட்டார்கள்.

திருமந்திரம் பாடல் #1688

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout