தொடர்ந்து படிக்கread this section continuously
கன்றல் கருதலுங் கருமை சேர்தலுந்தின்றல் சுவைத்தலுந் தீமைகள் செய்தலும்பின்றமை யென்றலும் பெருமை கூறலுமென்றிவை யிறைபா லிசைகை யல்லவே.
உரைmeaning
அகங்காரத்தினால் வருகின்ற கோபத்தை எண்ணிக்கொண்டு இருப்பதும், நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களைச் செய்து கர்மங்களைச் சேர்த்துக்கொள்வதும், உயிரை வளர்ப்பதற்காகச் சாப்பிடாமல் வாய்ச் சுவைக்காக ஆசைப்பட்டுச் சாப்பிடுவதும், தர்மத்திற்கு எதிரான தீய செயல்களைச் செய்வதும், தமக்குப் பின்புதான் மற்றவர்கள் என்கின்ற சுயநலத்தோடு இருப்பதும், தற்பெருமை பேசுவதும் ஆகிய இந்த ஆறு விதமான தன்மைகளும், இறைவனோடு சேர்ந்திருக்கும் நிலைக்குக் கொண்டு செல்லாது.
Dwelling on the anger that comes of egotism; acting out of the sense of I and so gathering karmas to oneself; eating not to sustain life but out of craving for the tongue's taste; doing evil deeds against dharma; keeping the selfishness that holds others come only after oneself; and speaking one's own praise: these six kinds of trait do not carry a person to the state of being joined with God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அகங்காரத்தினால் வருகின்ற கோபத்தை எண்ணிக்கொண்டு இருப்பதும், நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களைச் செய்து கர்மங்களைச் சேர்த்துக்கொள்வதும்,
Dwelling on the anger that comes of egotism, and acting out of the sense of I and so gathering karmas to oneself,
- வரி 2Line 2
உயிரை வளர்ப்பதற்காகச் சாப்பிடாமல் வாய்ச் சுவைக்காக ஆசைப்பட்டுச் சாப்பிடுவதும், தர்மத்திற்கு எதிரான தீய செயல்களைச் செய்வதும்,
eating not to sustain life but out of craving for the tongue's taste, and doing evil deeds against dharma,
- வரி 3Line 3
தமக்குப் பின்புதான் மற்றவர்கள் என்கின்ற சுயநலத்தோடு இருப்பதும், தற்பெருமை பேசுவதும்,
keeping the selfishness that holds others come only after oneself, and speaking one's own praise,
- வரி 4Line 4
ஆகிய இந்த ஆறு விதமான தன்மைகளும், இறைவனோடு சேர்ந்திருக்கும் நிலைக்குக் கொண்டு செல்லாது.
these six kinds of trait do not carry a person to the state of being joined with God.
திருமந்திரம் பாடல் #1686
1 / 2





