தொடர்ந்து படிக்கread this section continuously
ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள்வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்தாய்முலை யாவ தறியார் தமருளொருவூனிலை செய்யு முருவிலி தானே.
உரைmeaning
ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று சொல்லாமல், தன்னை அழைக்கிறார்கள், என்ன என்று கேட்போம் என்கின்ற அடிப்படை அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட, தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த தாயின் மார்பில் இருந்து வருகின்ற இனிமையான பால் ஊறுகின்ற, தமது தாயின் மார்பகமாக இருப்பது எது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். தமக்கு உள்ளே ஒரு சக்தியாக இருந்து தமது உடலை நிலையாகப் பிடித்து வைத்திருப்பது உருவம் இல்லாத இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை.
Even ordinary people, who have the plain good sense not to call out hey in return when someone calls out hey to them, but to ask instead what it is they are wanted for, do not know what it was that stood as their own mother's breast, from which, when they were infants and took it into the mouth, the sweet milk came welling. They do not know that what stands within them as a power and holds their body steady is God himself, who has no form.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று சொல்லாமல், தன்னை அழைக்கிறார்கள், என்ன என்று கேட்போம் என்கின்ற அடிப்படை அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட,
Even ordinary people, who have the plain good sense not to call out hey in return when someone calls out hey to them, but to ask instead what it is they are wanted for,
- வரி 2Line 2
தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த தாயின் மார்பில் இருந்து இனிமையான பால் ஊறி வந்ததை நினைத்துப் பார்ப்பதில்லை.
do not stop to consider the sweet milk that came welling from the mother's breast they took into the mouth when they were infants.
- வரி 3Line 3
தமது தாயின் மார்பகமாக இருப்பது எது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
They do not know what it was that stood as their own mother's breast.
- வரி 4Line 4
தமக்கு உள்ளே ஒரு சக்தியாக இருந்து தமது உடலை நிலையாகப் பிடித்து வைத்திருப்பது உருவம் இல்லாத இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை.
They do not know that what stands within them as a power and holds their body steady is God himself, who has no form.
திருமந்திரம் பாடல் #1682
1 / 2





