திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1683

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்கநீயொன்று செய்ய வுறுதி நடந்தாகாதீயென்றிங் குன்னைத் தெளிந்தேன் தெளிந்தபின்பேயென்றிங் கென்னை பிறர்தெளி யாரே.

உரை

வாயின் மூலம் ஒன்று சொல்லவும், அதே நேரத்தில் மனமானது வேறொன்றைச் சிந்திக்கவும், அப்போது நீங்கள் வேறொன்றைச் செய்வதாகவும் இருந்தால், உறுதியாக நடப்பது எதுவும் பயன் ஆகாது. எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம் என்று, இந்த உலகத்திலேயே இறைவனாகிய உன்னை யான் தெளிவாக அறிந்து கொண்டேன். அவ்வாறு தெளிவாக அறிந்த பிறகு, இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன் என்று இந்த உலகத்தில் என்னை வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    வாயின் மூலம் ஒன்று சொல்லவும், அதே நேரத்தில் மனமானது வேறொன்றைச் சிந்திக்கவும் இருந்தால்,

  • வரி 2

    அப்போது நீங்கள் வேறொன்றைச் செய்வதாகவும் இருந்தால், உறுதியாக நடப்பது எதுவும் பயன் ஆகாது.

  • வரி 3

    எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம் என்று, இந்த உலகத்திலேயே இறைவனாகிய உன்னை யான் தெளிவாக அறிந்து கொண்டேன்.

  • வரி 4

    அவ்வாறு தெளிவாக அறிந்த பிறகு, இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன் என்று இந்த உலகத்தில் என்னை வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.

திருமந்திரம் பாடல் #1683

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout