திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1684

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

பஞ்சத் துரோகத் ததிபாதகர் தம்மைப்பஞ்ச சமையத்தோர் வேந்த னருந்தெண்டம்விஞ்சத்த வப்புவி வேறே விடாவிடிற்பஞ்சத் துள்ளாகிப் புவியெங்கும் பாட்குமே.

உரை

ஐந்து வகையான மகா பாவங்களையும் செய்வதோடு, ஒரு உண்மையான ஞானியைப் போலப் பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றித் துரோகம் செய்வது, அந்த மகா பாவங்களுக்கும் மேலான பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது. அப்படி ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களைச் செய்பவர்களைப் பார்த்து, அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்தப் பாவங்களைக் கடைப்பிடித்து விடாதபடி, அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்தப் பஞ்ச மகா துரோகிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனையைக் கொடுத்து, தங்களுடைய புண்ணியமான நாட்டை விட்டு அவர்களை விலக்கி வைத்து வேறு இடத்திற்குப் போகும்படி கொண்டு சென்று விடாமல் இருந்தால், அவர்களுடைய புண்ணிய நாடு பஞ்சத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுவதும் பாழாகப் போய்விடும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஐந்து வகையான மகா பாவங்களையும் செய்வதோடு, ஒரு உண்மையான ஞானியைப் போலப் பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றித் துரோகம் செய்வது, அந்த மகா பாவங்களுக்கும் மேலான பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது.

  • வரி 2

    அப்படி ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களைச் செய்பவர்களைப் பார்த்து, மற்றவர்களும் அந்தப் பாவங்களைக் கடைப்பிடித்து விடாதபடி, அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்தப் பஞ்ச மகா துரோகிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.

  • வரி 3

    தங்களுடைய புண்ணியமான நாட்டை விட்டு அவர்களை விலக்கி வைத்து வேறு இடத்திற்குப் போகும்படி கொண்டு சென்று விடாமல் இருந்தால்,

  • வரி 4

    அவர்களுடைய புண்ணிய நாடு பஞ்சத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுவதும் பாழாகப் போய்விடும்.

திருமந்திரம் பாடல் #1684

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout