திருமூலர் அருளிய திருமந்திரம்
12. சிவ வேடம்

ஆறாம் தந்திரம் பாடல் 1676–1679 (4 பாடல்கள்)

அருளால் அரனுக் கடிமைய தாகிப்பொருளாந் தனதுடற் பொற்பதி நாடிஇருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.

உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகாவுடல்கழன் றால்வேட முடனே கழலுமுடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார்கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே.

மயலற் றிருளற்று மாமன மற்றுக்கயலுற்ற கண்ணிதன் கைப்பிணக் கற்றுத்தயவற் றவரோடுந் தாமே தாமாகிச்செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே.

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரேநாடுமி னந்தியை நம்பெருமான் றன்னைத்தேடுமி னின்பபொருள் சென்றெய்த லாமே.

திருமந்திரம் பாடல் #1676

1 / 4

0:000:00
12. சிவ வேடம்பாடல் 1676

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout