ஞானமில் லார்வேடம் பூண்டு நரகத்தர்ஞானமுள் ளார்வேட மின்றெனில் நன்முத்தர்ஞானமு ளவாக வேண்டுவோர் நக்கன்பால்ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லைநன்ஞானத் தோர்வேடம் பூணாரருள் நண்ணித்துன்ஞானத் தோர்சமையத் துரியத் துளோர்பின்ஞானத் துளோரென்று பேசகி லாரே.
சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்குமவமான சாதன மாகாத தாகிலவமா மவர்க்கது சாதன நான்குமுவமான மில்பொரு ளுள்ளுற லாமே.
கத்தித் திரிவர் கழுவடி நாய்போலக்கொத்தித் திரிவர் குரக்கறி ஞானிகளொத்துப் பொறியு முடலு மிருக்கவேசெத்துத் திரிவர் சிவஞானியார் களே.
அடியா ரவரே யடியா ரல்லாதாரடியாரு மாகாது வேடமு மாகாவடியார் சிவஞான மானது பெற்றாரடியா ரல்லாதா ரடியாரு மன்றே.
ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமேஞானமவ் வேடமருண் ஞான சாதனமானது மாமொன்று மாகாதவ னுக்கே.
ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானிதானத்தில் வைத்தல் தனியாலை யத்தனாமோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாமேனைத் தவசி யிவனென லாகுமே.
தானறி தன்மையுந் தானவ னாதலுமேனைய வச்சிவ மான வியற்கையுந்தானுறு சாதகர முத்திரை சாத்தலுமோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1668
1 / 8




