திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1671

ஆறாம் தந்திரம்11. ஞான வேடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கத்தித் திரிவர் கழுவடி நாய்போலக்கொத்தித் திரிவர் குரக்கறி ஞானிகளொத்துப் பொறியு முடலு மிருக்கவேசெத்துத் திரிவர் சிவஞானியார் களே.

உரை

தாம் அறிந்து கொண்டவற்றையே ஞானம் என்று எண்ணி, மற்றவர்களுக்கு அதையே எடுத்துச் சொல்லித் திரிகின்ற பொய்யான ஞானிகள், கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு அடியில் நின்று, எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயைப் போலவே, ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள். தமது குரலின் பேச்சுத் திறமையையே அறிவு என்று எண்ணுகின்ற பொய்யான ஞானிகள், கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே, எப்போது இறைச்சியைக் கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே, ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள், அவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருப்பதைப் பிடுங்கி உண்ணலாம் என்று திரிவார்கள். உண்மையான சிவ ஞானிகளோ, ஒன்றாக இருக்கின்ற ஐந்து புலன்களும் உடலும் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், அவற்றைத் தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்குகின்ற வல்லமையோடு, செத்த பிணத்தைப் போலவே எந்த இடத்திலும் கிடப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தாம் அறிந்து கொண்டவற்றையே ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்குச் சொல்லித் திரிகின்ற பொய்யான ஞானிகள், கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு அடியில் நின்று, எப்போது இறைச்சி கிடைக்கும் என்று குரைத்து அலைகின்ற நாயைப் போல, ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள்.

  • வரி 2

    தமது குரலின் பேச்சுத் திறமையையே அறிவு என்று எண்ணுகின்ற பொய்யான ஞானிகள், அந்த உடலுக்கு மேலே இறைச்சியைக் கொத்தி உண்ண எண்ணித் திரிகின்ற கழுகுகளைப் போல, ஏமாளிகளை ஏமாற்றி அவர்களிடம் இருப்பதைப் பிடுங்கி உண்ணலாம் என்று திரிவார்கள்.

  • வரி 3

    உண்மையான சிவ ஞானிகளோ, ஒன்றாக இருக்கின்ற ஐந்து புலன்களும் உடலும் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், அவற்றைத் தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்குகின்ற வல்லமை உடையவர்கள்.

  • வரி 4

    அத்தகைய சிவ ஞானிகள் செத்த பிணத்தைப் போலவே எந்த இடத்திலும் கிடப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1671

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout