திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1672

ஆறாம் தந்திரம்11. ஞான வேடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அடியா ரவரே யடியா ரல்லாதாரடியாரு மாகாது வேடமு மாகாவடியார் சிவஞான மானது பெற்றாரடியா ரல்லாதா ரடியாரு மன்றே.

உரை

உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற ஞானிகளே அடியவர்கள் ஆவார்கள். அப்படி இல்லாதவர்கள் அடியவர்களாகவும் ஆக மாட்டார்கள்; அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும் உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது. அடியவர் என்பவர்கள், இறைவனுடைய சிவ ஞானமாக இருக்கின்ற உண்மையான ஞானத்தை இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள். அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான எந்தத் தன்மையும் இல்லாதவர்கள் அடியவர்களாக ஆக மாட்டார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற ஞானிகளே அடியவர்கள் ஆவார்கள்; அப்படி இல்லாதவர்கள் அடியவர்கள் அல்லர்.

  • வரி 2

    அவர்கள் அடியவர்களாகவும் ஆக மாட்டார்கள்; அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும் உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது.

  • வரி 3

    அடியவர் என்பவர்கள், இறைவனுடைய சிவ ஞானமாக இருக்கின்ற உண்மையான ஞானத்தை இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள்.

  • வரி 4

    அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான எந்தத் தன்மையும் இல்லாதவர்கள் அடியவர்களாக ஆக மாட்டார்கள்.

திருமந்திரம் பாடல் #1672

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout