திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1673

ஆறாம் தந்திரம்11. ஞான வேடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமேஞானமவ் வேடமருண் ஞான சாதனமானது மாமொன்று மாகாதவ னுக்கே.

உரை

உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்குத் தானாகவே அமைந்த வேடமும் அவர்களுடைய சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தைப் பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால், உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும்.

  • வரி 2

    அவர்களுக்குத் தானாகவே அமைந்த வேடமும் அவர்களுடைய சிவ யோகமாகவே இருக்கின்றது.

  • வரி 3

    உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது; இறைவனின் திருவருள் ஞானத்தைப் பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது.

  • வரி 4

    ஆதலால், உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

திருமந்திரம் பாடல் #1673

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout