தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானிதானத்தில் வைத்தல் தனியாலை யத்தனாமோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாமேனைத் தவசி யிவனென லாகுமே.
உரைmeaning
உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனுடைய திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தைப் பெற்ற ஞானிகள், தங்களிடம் உள்ள அருளைத் தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்; அதனால் அவர்களே ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாக இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால், முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும், சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்றத் தவசிகளும் இறைவனுடைய திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால், இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.
Jnanis who have reached the sacred feet of God through true wisdom and gained the Siva wisdom give the grace they hold to the worthy who come seeking them, and by that they are themselves a temple of a singular kind. Because they abide in the state of silence in which speech, act and mind are stilled, they are the liberated who are seated in the state of liberation, and because their thought is always upon Sivam alone they are siddhas as well. It is true that other ascetics too, if like these they hold in mind the sacred feet of God alone and abide in that state of silence, can reach the state these have reached.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனுடைய திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தைப் பெற்ற ஞானிகள்,
Jnanis who have reached the sacred feet of God through true wisdom and gained the Siva wisdom,
- வரி 2Line 2
தங்களிடம் உள்ள அருளைத் தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்; அதனால் அவர்களே ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாக இருக்கின்றார்கள்.
give the grace they hold to the worthy who come seeking them, and by that they are themselves a temple of a singular kind.
- வரி 3Line 3
அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால், முக்தர்களாகவும், சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள்.
Because they abide in the state of silence in which speech, act and mind are stilled they are the liberated, and because their thought is always upon Sivam alone they are siddhas as well.
- வரி 4Line 4
இவர்களைப் போலவே மற்றத் தவசிகளும் இறைவனுடைய திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால், இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.
It is true that other ascetics too, if like these they hold in mind the sacred feet of God alone and abide in that state of silence, can reach the state these have reached.
திருமந்திரம் பாடல் #1674
1 / 2





