திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1675

ஆறாம் தந்திரம்11. ஞான வேடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானறி தன்மையுந் தானவ னாதலுமேனைய வச்சிவ மான வியற்கையுந்தானுறு சாதகர முத்திரை சாத்தலுமோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.

உரை

தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும், நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவமாகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும், குரு நாதராக இருக்கின்ற இறைவனுடைய திருவடிகளை அடைந்து முக்தியைப் பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கான அடையாளங்கள் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும்,

  • வரி 2

    தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும், நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவமாகவே இருக்கின்ற தன்மையும்,

  • வரி 3

    தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும்,

  • வரி 4

    மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும், குரு நாதராக இருக்கின்ற இறைவனுடைய திருவடிகளை அடைந்து முக்தியைப் பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கான அடையாளங்கள் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1675

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout