தொடர்ந்து படிக்கread this section continuously
அருளால் அரனுக் கடிமைய தாகிப்பொருளாந் தனதுடற் பொற்பதி நாடிஇருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.
உரைmeaning
இறைவனுடைய திருவருளால் இறைவனுக்குத் தானாகவே அடிமையாகத் தாம் ஆகி, பொருளாக இருக்கின்ற தமது உடலே பொன் அம்பலமாக மாறி, அதில் நடனமாடும் இறைவனைத் தமக்குள் தேடி அடைந்து, ஆணவம் கன்மம் மாயை என்று இருக்கின்ற மும்மலங்களும் இல்லாமலும், நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான செயல்களும் இல்லாமலும் ஆகி, தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு அடைந்த உண்மையான அடியவர்களே, இறைவனுடைய வேடத்தைக் கொண்டவர்கள் ஆவார்கள்.
By the grace of God they become of themselves the servants of God; their own body, which is a mere thing, turns into the golden hall, and within themselves they seek out and reach the God who dances in it; they come to be without the three impurities, anavam, kanmam and mayai, and without either of the two kinds of act, the good and the bad; and those true servants, who have gained clarity in the wisdom they received, are the ones who bear the garb of God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனுடைய திருவருளால் இறைவனுக்குத் தானாகவே அடிமையாகத் தாம் ஆகி,
By the grace of God they become of themselves the servants of God,
- வரி 2Line 2
பொருளாக இருக்கின்ற தமது உடலே பொன் அம்பலமாக மாறி, அதில் நடனமாடும் இறைவனைத் தமக்குள் தேடி அடைந்து,
and their own body, which is a mere thing, turns into the golden hall, and within themselves they seek out and reach the God who dances in it.
- வரி 3Line 3
ஆணவம் கன்மம் மாயை என்று இருக்கின்ற மும்மலங்களும் இல்லாமலும், நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான செயல்களும் இல்லாமலும் ஆகி,
They come to be without the three impurities, anavam, kanmam and mayai, and without either of the two kinds of act, the good and the bad.
- வரி 4Line 4
தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு அடைந்த உண்மையான அடியவர்களே, இறைவனுடைய வேடத்தைக் கொண்டவர்கள் ஆவார்கள்.
Those true servants, who have gained clarity in the wisdom they received, are the ones who bear the garb of God.
திருமந்திரம் பாடல் #1676
1 / 2





