திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1669

ஆறாம் தந்திரம்11. ஞான வேடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லைநன்ஞானத் தோர்வேடம் பூணாரருள் நண்ணித்துன்ஞானத் தோர்சமையத் துரியத் துளோர்பின்ஞானத் துளோரென்று பேசகி லாரே.

உரை

இழிவான ஞானத்தைக் கொண்டவர்கள், உண்மை ஞானம் கொண்டவர்கள் போலப் பொய்யாக வேடம் அணிந்தாலும், அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. நன்மையான ஞானத்தைப் பெற்றவர்கள் வேடம் அணிந்து கொள்வதை விரும்பாமல், இறைவனின் திருவருள் கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள். தீமையான ஞானத்தைக் கொண்டவர்கள், தத்தமது சமயங்களின் கொள்கைகளின் மேல் நீங்காத பற்று உள்ளவர்கள் ஆதலால், தங்களுடைய சமயமே பெரியது என்று பேசித் தவறான வழியில் செல்வார்கள். அதனால் பிறகு, உண்மை ஞானத்தைத் தாம் கொண்டவர்கள் என்று அவர்களால் பேச முடியாது.

வரி வாரியாக

  • வரி 1

    இழிவான ஞானத்தைக் கொண்டவர்கள், உண்மை ஞானம் கொண்டவர்கள் போலப் பொய்யாக வேடம் அணிந்தாலும், அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

  • வரி 2

    நன்மையான ஞானத்தைப் பெற்றவர்கள் வேடம் அணிந்து கொள்வதை விரும்பாமல், இறைவனின் திருவருள் கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள்.

  • வரி 3

    தீமையான ஞானத்தைக் கொண்டவர்கள், தத்தமது சமயங்களின் கொள்கைகளின் மேல் நீங்காத பற்று உள்ளவர்கள் ஆதலால், தங்களுடைய சமயமே பெரியது என்று பேசித் தவறான வழியில் செல்வார்கள்.

  • வரி 4

    அதனால் பிறகு, உண்மை ஞானத்தைத் தாம் கொண்டவர்கள் என்று அவர்களால் பேச முடியாது.

திருமந்திரம் பாடல் #1669

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout