தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானமில் லார்வேடம் பூண்டு நரகத்தர்ஞானமுள் ளார்வேட மின்றெனில் நன்முத்தர்ஞானமு ளவாக வேண்டுவோர் நக்கன்பால்ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.
உரைmeaning
உண்மை ஞானம் இல்லாதவர்கள் பொய்யாக வேடம் அணிந்தால், நரகத்திற்கே செல்வார்கள். உண்மை ஞானத்தை உடையவர்கள் வேடம் அணிந்து இல்லாமல் இருந்தாலும், நன்மையான முக்தியைப் பெறுவார்கள். உண்மை ஞானம் தமக்குள் உருவாக வேண்டும் என்று விரும்புபவர்கள், மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின் அருகாமையை விரும்பி, உண்மை ஞானத்தைப் பெறுவதற்கு உள்ள வேடத்தைத் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று வேண்டி நிற்பார்கள்.
Those who have no true wisdom, if they put on a garb falsely, go to hell itself. Those who possess true wisdom, even if they wear no garb at all, gain the good liberation. Those who wish that true wisdom should arise within them long for the nearness of God, who abides in the state of maha nirvana, and stand praying that the garb by which true wisdom is gained may be granted to them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மை ஞானம் இல்லாதவர்கள் பொய்யாக வேடம் அணிந்தால், நரகத்திற்கே செல்வார்கள்.
Those who have no true wisdom, if they put on a garb falsely, go to hell itself.
- வரி 2Line 2
உண்மை ஞானத்தை உடையவர்கள் வேடம் அணிந்து இல்லாமல் இருந்தாலும், நன்மையான முக்தியைப் பெறுவார்கள்.
Those who possess true wisdom, even if they wear no garb at all, gain the good liberation.
- வரி 3Line 3
உண்மை ஞானம் தமக்குள் உருவாக வேண்டும் என்று விரும்புபவர்கள், மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின் அருகாமையை விரும்புவார்கள்.
Those who wish that true wisdom should arise within them long for the nearness of God, who abides in the state of maha nirvana.
- வரி 4Line 4
உண்மை ஞானத்தைப் பெறுவதற்கு உள்ள வேடத்தைத் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று வேண்டி நிற்பார்கள்.
They stand praying that the garb by which true wisdom is gained may be granted to them.
திருமந்திரம் பாடல் #1668
1 / 2





